புள்ளி வைத்து விட்டால் போர் முடிந்துவிடும்
என்றன பூனைகள்
நாங்கள் நாடகம் ஆடி நடனம் நடத்தி
எழுகின்ற எழுச்சியை அடகுகிறோம்
என்றது கிழட்டு நரி
ஆமாம் ! ஆமாம் என்பது போல்
தலையாட்டி திட்டம் தீட்டி செயல்படுத்தின
வடகாட்டு கொழுத்த ஓநாய்கள்
நாங்கள் இருகிறோமென்று ஆயுதம் அனுப்பி
ஆதரவு தெரிவித்தது வெளிக்காட்டு விலங்குகள்
இவை எல்லாம் போதாது என்று
சில புலிகள் நரியாக மாறியதால் தற்காலிக
வெற்றியில் கர்ச்சித்தன சிங்கங்கள்
பயந்துபோய் போய் புலம்பெயர்ந்த சில
பறவைகள் அகதிகளாய்
பாவம் எதிர்த்து அடிக்கவும் இயலாமல்
உணர்ச்சியை அடக்கவும் இயலாமல் தவித்தன
ஓநாயின் அடிமை எருமைகள்
என்ன நடந்தாலும்
உடல் தமிழ் மண்ணிற்கு உயிர் தமிழ் இனத்திறுக்கு
இதை உரக்க சொல்லுகிறோம் உலகிற்கு
என்ற உறுமலுடன்
குட்டிகளை மீட்க வழிகள் தேடின
புலிகள் மட்டும் காட்டிற்குள் .
நான் தூங்க கதை சொன்ன என் அம்மா தூங்கிவிட்டால் கதையை முடிக்காமலே
நான் விடியலுக்காக காத்திருந்தேன் புலிக்குட்டிகள் மீட்கப்படுமா என்ற கவலையுடன்
ஏனோ அந்த இரவு மட்டும் எனக்கு இன்றுவரை விடியவில்லை !
No comments:
Post a Comment